-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூலாக்காடு கிராம சேவகர் பிரிவில் முருக்கந்தீவு மக்கள் குடியிருப்பு பகுதியில் கொம்பன் யானையொன்று நேற்று வெள்ளிக்கிழமை நோய்வாய்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.
25 வயது மதிக்கத்தக்க 7 அடி நீளமான கொம்பன் யானையொன்றே இவ்வாறு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த யானை தொடர்பா கிராம உத்தியோகத்தரினால் கிரான் வனவிலங்கு திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் இது தொடர்பாக மேலதிக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வனவிலங்கு திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
மேலும் கடந்த வாரங்களில் காட்டு யானைகளின் தொல்லை ஓட்டமாவடி அதனை அண்டிய பிரதேசங்களில் ஊடுருவி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது .


