இந்தியா – ஆந்திரப் பிரதேசத்தில் ஹவுரா-சென்னை வழித்தடத்தில் பயணிகள் ரயில் ஒன்று தடம்மாறி மற்றொரு ரயிலை பின்னால் மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
குண்டூரில் இருந்து ராயக்கட்ட சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது.
அப்போது, அதே நேரத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா சென்று கொண்டிருந்த பேசஞ்சர் ரயில், ராயக்கட்ட ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் ராயக்கட்ட எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டது.
இந்த சோகம் மனிதத் தவறுகளால் ஏற்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.