ஆடி பூரத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி மாணிக்க பிள்ளையார் ஆலையத்திலிருந்து இன்று சனி கிழமை ஆரம்பமான கஞ்சிப்பானை பவனியானது சக்தி இல்லத்திலே கோவில் கொண்டுள்ள அருட் திரு அம்மா பங்காரு அடிகளாரின் ஆலயத்தில் முடிவடைந்தது.அதன் பின்பு விசேட நிகழ்வுகளும் இடம்பெற்றன. வருடா வருடம் இடம்பெறுகின்ற இந்த நிகழ்வு இம் முறையும் மிகவும் விமர்சையாக இடம் பெற்றதுடன் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
களுவாஞ்சிகுடி ஆதிபராசக்தி அருட்திரு பங்காரு அடிகளார் அம்மாவின் ஆலயமானது அம்மா பங்காரு அடிகளாரின் வேண்டுகோளுக்கு இணங்க சுவிஸ் நாட்டிலே தற்போது வாழுகின்ற அச்சுவேலியை சேர்ந்த தம்பிப்பிள்ளை உதயதாசின் எண்ணக்கருவாகும்.
மேலும் இந்த கஞ்சிப்பானை பவனியை திருமதி விவிதா (ஆலய பொறுப்பாளர்) தலைமை ஏற்று சிறப்பாக நடாத்தி முடித்தார்.
https://www.facebook.com/Minnal24newsofficial/videos/249721021189429
https://www.facebook.com/Minnal24newsofficial/videos/652079246847161




