உயர்தரத்தின் சில பாடங்களுக்கான ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, உயர்தரத்தின் கணிதம், விஞ்ஞானம், சர்வதேச மொழிகள், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்காக ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
ஆசிரியர் சேவை விதிமுறைகளுக்கு அமைவாக 35 வயதுக்கு குறைவான 5450 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த போட்டிப் பரீட்சைக்காக எதிர்வரும் சில வாரங்களில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.










