அனைத்து தரங்களுக்குமான 5000 அதிபர்களுக்கான நியமன கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படவுள்ளதாகவும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படும் என நம்புவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
“மூன்று தரங்களிலும் 5000 அதிபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர். அவர்களின் நியமனக் கடிதங்களை அடுத்த மாதம் 4ஆம் திகதி வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.