வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், நேற்று புதன் கிழமை ஆசிரியர்கள் மூவருக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
மோதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் கூறுகையில், இது குறித்து விசாரணை செய்வதற்காக குழு ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.