யாழ்ப்பாணம் நீர்வேலியிலுள்ள ஆசிரியரொருவரின் வீட்டினுள் புகுந்த இன்று செவ்வாய் கிழமை அதிகாலை கொள்ளையர்கள் தங்கச் சங்கிலி, பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் இருந்த கணவன், மனைவி இருவரும் ஆசிரியர்கள் என்பதுடன் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.