உஸ்பெகிஸ்தானின் டஸ்கன் நகரில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான 17வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சதுரங்க அணி 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.
கொழும்பு ரோயல் கல்லூரியின் வினுக விஜேரத்ன 02 தங்கப் பதக்கங்களையும், மாத்தறை சுஜாதா கல்லூரியின் ஹோசித்மி பெஹன்சா சமரவீர மற்றும் இரத்தினபுரி பெர்குசன் உயர் கல்லூரியின் இலிஷா உமண்டி முதலி ஆகியோர் ஒரு தங்கப்பதக்கத்தினையும் வத்தளை லைசியம் கல்லூரியின் துலன் பிம்சாட் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்