விடுமுறை வழங்கப்பட்டிருந்த ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று திங்கட்கிழமை முதல் வழமைப்போல் இயங்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த புதன்கிழமை முதல் வெள்ளி கிழமைவரை குறித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு சீரான காலநிலை நிலவுவதை கருத்திற்கொண்டு பாடசாலை நடவடிக்கைகளை வழமைப்போல் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.