அஸ்வெசும எனப்படும் ஆறுதல் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்தில், மலையக மக்களை உள்ளீர்ப்பதில், அரச ஊழியர்கள் உதாசீனப் போக்குடன் செயற்படுவதாக, முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை பிரதமர் தினேஸ் குணவர்தனவுடன் கலந்துரையாடியதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.