அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை 800,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த விண்ணப்பங்களில் இருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில், வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.