அவிசாவளை, சீதாவக்க ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் அமைந்துள்ள இறப்பர் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று வெள்ளி கிழமை மாலை ஏற்பட்ட தீயினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் புகை மூட்டத்தினால் 08 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தீ விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.