அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஹானஸ்டி டி லா டோரே (வயது – 37) என்ற பெண் தனது 7 வார குழந்தைக்கு கடந்த சனிக்கிழமை பாலுக்கு பதிலாக மதுவை கொடுத்துள்ளார்.
சனிக்கிழமை அன்று நள்ளிரவு வாக்கில் ரியால்டோ என்ற பகுதியில் காரில் வந்த இந்த பெண் தன்னுடைய குழந்தையின் அழுகையை அடக்குவதற்காக பால்புட்டியில் பாலுக்கு பதிலாக மதுவை கலந்து அந்த குழந்தைக்கு கொடுத்துள்ளார். இதை பார்த்த சிலர் கொடுத்த புகாரின் பேரில் இந்த பெண் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது வரை அந்த குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.