பொதுத் தேர்தலில் போட்டியிட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா உட்பட ஒன்பது வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மற்றும் வேட்பாளர்களான சசிகலா ரவிராஜ், ஏ. உமாகரன் ராசையா, எஸ். மயூரன், டி. கிருஷ்ணானந்த், என். கவுசல்யா மற்றும் குருசாமி சுரேன் ஆகியோர் இவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேட்பாளர் சசிகலா ரவிராஜாவின் வாக்குமூலத்தை மட்டுமே பொலிஸார் பதிவு செய்துள்ளதுடன் ஏனையவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.