சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலையில் மொத்தமாகப் பெறுவதுடன் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் காரணமாக அரிசி வர்த்தகத்திலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோ சம்பாவின் விலை ரூ. 240.00 ஆகவும், ஒரு கிலோ கிரி சம்பாவின் விலை ரூ. 260.00 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், தற்போது கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலையில் இந்த அரிசி வகைகள் கிடைப்பதால், தங்கள் வணிகத்தை பராமரிக்க அதிக விலைக்கு இந்த அரிசி வகைகளை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய பின்னணியில், கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலையில் அரிசியை விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டி, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் காரணமாக ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான அபராதம் செலுத்த வேண்டிய அபாயம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.