அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்ட மூன்று புதிய மருந்துகள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தைராக்ஸின் குறைபாட்டிற்கான மருந்து, வாயு அமிலத்தன்மைக்கான மருந்து மற்றும் வலி நிவாரணி மருந்து ஆகிய மூன்று மருந்துகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரத்மலானை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபன வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.