அனுராதபுரம் டிப்போவிற்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற பேருந்தின் பயணிகளை இறக்கிவிட்டு, அவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்ட போது, சாரதி இருக்கைக்கு அருகில் உள்ள டேஷ்போர்டில், பார்சலில் சுற்றப்பட்ட நிலையில் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
இதன் போது 143 கிராம் எடை கொண்ட 273 வெள்ளை பொலிதினில் சுற்றப்பட்டிருந்த ஹெரோயின் பொதிகள் மிட்கப்பட்டதுடன் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.