அரச ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட பலன்கள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் : நிதியமைச்சர்

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அல்லது நலன்புரி உள்ளிட்ட பலன்கள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

“அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நலன்புரி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என்று அமைச்சர் தெரித்தார்.

“நாட்டின் பொருளாதாரம் நிலையான நிலையில் இருந்தாலும், நாம் இன்னும் நெருக்கடியிலிருந்து முழுமையாக வெளிவரவில்லை. நெருக்கடியை சமாளிக்க தேவையான வேலைத்திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை நிர்வகிப்பதன் மூலம் அனைத்து கட்டாய மற்றும் அத்தியாவசிய கொடுப்பனவுகளும் செய்யப்படுகின்றன.

இதுபற்றி தேவையற்ற அச்சம் எதுவும் இருக்கக் கூடாது. மேலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து நிலுவைத் தொகையை வழங்குவதற்கான ஒழுங்கான மற்றும் முறையான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரச ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட  பலன்கள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் : நிதியமைச்சர்
அரச ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட பலன்கள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் : நிதியமைச்சர்