இலங்கை மற்றும் இந்திய நாடுகளின் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை தற்போது அரசியலாக்கப்படுவதை, தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாணத்திலுள்ள கடற்றொழில் அமைப்புக்கள் கூட்டாக யாழ்ப்பாணத்தில் நேற்று புதன் கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.
மேலும், இந்திய பிரதமர் சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து இலங்கையின் வடக்கு கிழக்கு கடற்பகுதியை மீட்டுத்தரவேண்டும் எனவும் அவர் இதன் போது வேண்டுகோள் விடுத்திருந்தார்.