பழிவாங்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி இதனைதெரிவித்தார் .
“மக்கள் தங்களுக்கு வழங்கிய சலுகைகளை விட பாரியது எதுவும் இல்லை. அது தங்களிடம் இருக்கும் வரை, எந்தவொரு சலுகையையும் நீக்குவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை.” எனகுறிப்பிட்டுள்ளார் .