அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக குளங்களில் நீர் மட்டம் அதிகரிப்பதால் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அம்பாறை இங்கினியாகல சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 102.4 அடிகளையும் தாண்டிச்செல்வதால் இன்று திங்கட்கிழமை மாலை அதன் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாகவும் இது குறித்து ஆற்றோரங்கள் மற்றும் தாழ் நிலப்பிரதேசத்தில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். ரியாஸ் தெரிவித்துள்ளார்.