-அம்பாறை நிருபர்-
தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை நாடெங்கிலும் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையங்களில் ஆரம்பமானது.
2888 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இம்முறை மொத்தமாக 337,956 பரீட்சார்த்திகள் 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை, சம்மாந்துறை,அக்கரைப்பற்று கல்வி வலயங்களிலும் இன்று இப்பரீட்சை ஆரம்பமாகியுள்ளதுடன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு மகிழ்ச்சியுடன் பெற்றோருடன் வருகை தந்திருந்தனர்.
மேலும் பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸார் வருகை தந்து பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



