அம்பாறை – தெஹியத்தகண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்மல்துவ பகுதியில் நேற்று சனிக்கிழமை காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெஹியத்தகண்டி பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிர் இழந்த நபர் கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை விரட்டி அடித்த போதே யானை தாக்கி உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெஹியத்தகண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










