ஹம்பாந்தோடை – அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில், சட்டவிரோத மதுபானம் தொடர்பான தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
அம்பலாந்தோட்டை, தங்காலை மற்றும் ஹுங்கம பொலிஸார் இணைந்து நடத்திய விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்