அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் சகோதரியின் வீட்டில் திருடுவதற்கு முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மூன்று நாட்கள் இவ்வாறு வீட்டுக்குள் சென்று திருட முயற்சித்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக திருட சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் திருடியதாக கூறப்படும் பொருட்களின் மொத்த பெறுமதி 11,345,000 என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்கேநபர் இன்று ஞாயிற்று கிழமை வெலிசர நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.