நீர்மட்டங்கள் வழமைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, நான்கு ஆற்றுப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களம் நீக்கியுள்ளது.
இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில், பின்வரும் பகுதிகளுக்கான வெள்ள அபாய எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- கிங் கங்கை
- அத்தனகலு ஓயா
- களு கங்கையின் குடா கங்கை உப ஆற்றுப் பகுதி
- நில்வளா கங்கை
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் மழை நிலைமைகள் மற்றும் ஆறுகளின் நீர்மட்ட மாற்றங்கள் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் ஏதேனும் வெள்ள நிலைமை ஏற்படும் பட்சத்தில் முன்கூட்டியே எச்சரிக்கைகளை விடுப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.










