உக்ரைன் தான் வழங்கிய கொத்துக்குண்டுகளை பயன்படுத்துகின்றது என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன்கிர்பி இதனை தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் பாதுகாப்பு முன்னரங்குகள் மற்றும் நடவடிக்கைகளிற்கு எதிராக உக்ரைன் உரிய விதத்தில் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துகின்றது என தெரிவித்துள்ள அவர் அதனை பலன் அளிக்ககூடிய விதத்தில் பயன்படுத்துகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
100க்கும் மேற்பட்ட நாடுகள் கொத்துக்குண்டுகளை தடைசெய்துள்ளன. எனினும் உக்ரைனின் வெடிபொருட்களை வலுப்படுத்துவதற்காக கொத்துக்குண்டுகளை அமெரிக்கா உக்ரைனிற்கு வழங்கியுள்ளது.
ரஸ்ய படையினரின் நிலைகளை அழிப்பதற்கு மாத்திரம் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவதாக உக்ரைன் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.