அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டத்தில் மவுயி தீவில் உள்ள காடுகளில் தீ பிடித்த நிலையில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என மவுயி தீவு மேயர் ரிச்சர்ட் பைசன் தெரிவித்துள்ளார்.
வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதுடன் லஹைனா பகுதியிலும் காட்டுத் தீ பரவியதால் வானுயர கரும்புகை எழுந்தது அங்கு வசிக்கும் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்க கடலோர பாதுகாப்பு படையினரால் ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன.