இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை எதிர்வரும் பெப்ரவரி 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இறுதிக் கிரியை மாவிட்டபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் காலை 8 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
அதனைத் தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு அஞ்சலி உரைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று, பின்னர் பிற்பகல் 1 மணியளவில் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்