அப்புத்தளை பகுதியில் உள்ள ஹோட்டலில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.