சந்தையில் பழங்களின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பழங்களின் விலை அதிகரிப்பின் பின்னணியில், சராசரி அளவுள்ள அன்னாசிப்பழத்தின் விலை 550 ரூபாவைத் தாண்டியுள்ளது.
அன்னாசிப்பழக் கடைகள் அதிகம் உள்ள கொழும்பு பிரதான வீதியில் பாலும்மஹர மற்றும் இம்புல்கொட பிரதேசங்களில் அன்னாசிப்பழம் கையிருப்பு இல்லாத காரணத்தினால் சில அன்னாசிக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை மற்றும் உரம் இல்லாததால் அன்னாசிப்பழத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.