-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை நிலாவெளி சாம்பல் தீவு பகுதியில் வீதியில் அனுமதிக்க முடியாத எட்டு மோட்டார் சைக்கிளுடன் எட்டு இளைஞர்கள் இன்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மீகமுவ மற்றும் அதனை அண்டிய பகுதியை சேர்ந்த 20 தொடக்கம் 25 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த மோட்டார் சைக்கிளானது போட்டிக்காக கொண்டு வந்ததாகவும் இதில் ஆறு மோட்டார் சைக்கிளுக்கு அனுமதி பத்திரம் இல்லை என்பதும் தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் எனவும் தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்களை உரிய மோட்டார் சைக்கிளுடன் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.