நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 13,627 குடும்பங்களை சேர்ந்த 55,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மேல் மாகாணத்தில் 10,990 குடும்பங்களைச் சேர்ந்த 45,138 நபர்களும் தென்மாகாணத்தில் 2,119 குடும்பங்களைச் சேர்ந்த 8,615 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
702 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 930 பேர் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.