பத்து கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 04 பொதிகளை அந்தரங்கப் பகுதியில் வைத்து கடத்திய இளம் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
விமான நிலையத்தில் தீர்வையற்ற கடைத்தொகுதியில் அழகுசாதான பொருட்கள் விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் 24 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட தங்க ஜெல் அடங்கிய பொதிகளும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.