அநுராதபுரம் வைத்தியர் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்றைய தினம் திங்கட்கிழமை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
குறித்த சந்தேகநபர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் இன்று வரையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
முன்னாள் இராணுவ சிப்பாயான குறித்த சந்தேகநபர் கடந்த 12 ஆம் திகதி கல்னேவ பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.