அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வண. பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக அமைந்துள்ள தானசாலை வளாகத்தில், பௌத்த பிக்குகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போதே இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக ஆரம்பத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்த பிக்குகளில் மூவர், பின்னர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









