-மன்னார் நிருபர்-
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தலை மன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத இழுவை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இரண்டு ரோலர் படகுகள் உட்பட அதில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்களையும் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்