அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை விதிக்காவிட்டால், சில பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
தற்போது அரிசிக்கு மட்டும் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, சந்தையில் ஏனைய பொருட்களின் விலைகள் வர்த்தகர்களாலும் உற்பத்தி நிறுவனங்களாலும் அவ்வப்போது உயர்த்தப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை விதிக்காத காரணத்தினால் கடந்த காலங்களில் பல தடவைகள் பொதியிடல் பொருட்கள் தொடர்பான பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
பிஸ்கட், சோப்பு, சலவை பவுடர், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், சோயா பாக்கெட்டுகள் என பல பொருட்களின் விலை தற்போது அதிகமாக உள்ளது.
இதனால் சில பொருட்களை வாங்க நுகர்வோர் மறுத்து விட்டனர்.
எனவே, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.