தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன் விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.