மக்கள் அனைவரையும் கண்களில் நேரடியாக சூரிய ஒளி படாத வண்ணம் செயற்படுமாறும், தரமான கண்ணாடிகள் மற்றும் தொப்பிகளை அணியுமாறும் தேசிய கண் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் பிரசாத் கொலம்பகே கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் நேரடி சூரிய ஒளியால் வாந்தி, தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.
கண்ணாடிகள் அணிவதன் மூலம் சில கண் பிரச்சினைகள் வராதவாறு தவிர்க்கலாம் என்றும் அவ்வாறான நிலை ஏற்பட்டால் வைத்தியர்களிடம் மருத்துவ சிகிச்சை பெறுவதுடன் சிறந்தது உணவும் நீரிழப்பைத் தடுக்க தண்ணீர் மற்றும் திரவங்களை அருந்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.