பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவு நடத்திய ஆய்வில் இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் கடன் சுமை 47 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி பொருளாதார திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள குறித்த ஆய்வின் படி இலங்கை பிரஜை ஒருவருடைய கடன் தொகையானது 7 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில், 2022 ஏப்ரல் முதல் 2023 ஏப்ரல் வரை ஒவ்வொரு தனிநபரும் 130,000 ரூபாய் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.