பொலன்னறுவை பெலத்தியாவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இளைய சகோதரனால் கத்தியால் குத்தப்பட்டு மூத்த சகோதரன் உயிரிழந்துள்ளார்.
இருவருக்கிடையிலும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி மூத்த சகோதரனை இளைய சகோதரன் கத்தியால் குத்தியதையடுத்து தாக்குதலில் படுகாயமடைந்த மூத்த சகோதரன் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மானம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.