தேசிய அடையாள அட்டை புகைப்படங்களை செயலாக்குவதற்கான கட்டணத்தை திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானியை பொது பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி புதிய உத்தரவின்படி, டிஜிட்டல் படங்களை பதிவேற்றம் செய்ய பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞர்கள் இனி அதிகபட்சமாக ரூ. 400 அறவிடலாம்.
பதிவு செய்த பிறகு புதிய அடையாள அட்டை அல்லது நகல்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு இந்தக் கட்டணம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் இ-புகைப்பட மென்பொருள் அமைப்பில் டிஜிட்டல் படங்களை பதிவேற்றும் செயல்முறையை நெறிப்படுத்துவதே இந்த மாற்றத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் எடுத்துரைத்தார்.