மருதானை ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் உள்ள பாலம் ஒன்றிற்கு அருகிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாத ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் யாரென உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் 30 வயதுடையவரெனவும் 5 அடி 8 அங்குல உயரமுடைய மெல்லிய உடல்வாகுடையவர் எனவும் தாடியுடன் காணப்படும் நபர் ஊதா நிற காற்சட்டை மற்றும் நீல நிற டி சேர்ட் அணிந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாலத்திற்கு அருகில் நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக மருதானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.