குமண – எரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியூகுண விகாரைக்கு மேலே உள்ள ஏரிக்கு அருகில் நேற்று புதன் கிழமை காலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், ஆனால் அவர் 45-50 வயது மதிக்கத்தக்க, 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், மேலும் அவர் மேலே ஊதா நிற சட்டையும், ஆரஞ்சு மற்றும் ஊதா கலந்த சாரமும் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.