பண்டிகைக் காலங்களில் முட்டையின் விலை உயர்வால் இந்தியாவில் இருந்து முட்டைகளை தொடர்ந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, இரண்டு தடவைகள் இந்தியாவில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதோடு, 6 மில்லியன் முட்டைகளை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாளை நாட்டை வந்தடைய உள்ளது.
இதேவேளை, அடுத்த வருட இறுதிக்குள் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.