வெள்ளவத்தையில் ருத்ரா மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று செவ்வாய் கிழமை இரவு இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ருத்ரா மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனின் சடலம் அடுக்குமாடி குடியிருப்பின் பின் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.