வாழைத்தண்டு நன்மைகள்
பொதுவாக வாழைமரத்தில் இல்லை, காய், பூ, தண்டு என அனைத்தும் உண்ணக்கூடியதாகும். செடியின் தண்டுப்பகுதி சாப்பிடுவதற்கு எவ்வளவு ருசியாக இருக்கிறதோ, அவ்வளவு சத்துக்கள் நிறைந்தது. பலர் வாழைத்தண்டுகளை வீணாக வீசுகின்றனர். ஆனால் வாழைத்தண்டு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. உடலை சுத்தப்படுத்த குறிப்பாக வயிற்றை சுத்தமாக வைத்திருக்க வாழைத்தண்டு உதவுகிறது. மேலும் வாழைத்தண்டில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை இக்கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.
வாழைத்தண்டு வைட்டமின் B6 நிறைந்தது. மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து உள்ளது. எனவே, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் இது நன்மை பயக்கும். ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க அடிக்கடி வாழைத்தண்டு சாப்பிடுங்கள்.
வாழைத்தண்டில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது, இதன் காரணமாக பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க மற்ற உணவுகளுக்கு பதிலாக வாழைத்தண்டை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். இதை சாப்பிடுவதால் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது, இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும்.
உடலில் இருந்து நச்சுகளை அகற்ற வாழைத்தண்டு உதவுகிறது. சிறுநீரக கற்களை இயற்கையான முறையில் அகற்றவும் இது பயனுள்ளதாக இருக்கும். வாழைத்தண்டை வெட்டிய பின்னர் அடிப்பகுதியில் வரும் தண்ணீரை வடிகட்டி அருந்தினால் சிறுநீரக கற்கள் வெளியே வந்துவிடும்.
வாழைத்தண்டு நார்ச்சத்து நிறைந்த உணவாகும் . இதனை அடிக்கடி உணவில் சேர்த்துவர செரிமானம் சீராக இருக்க உதவுகிறது, இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். சிறுநீரக கற்களை இயற்கையான முறையில் அகற்றவும் உதவுகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுகள் நீக்கவும் வாழைத்தண்டு சாப்பிடலாம்.
அமிலத்தன்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டை வாரம் இரண்டு முறையாவது உட்கொள்ள வேண்டும். இது உடலில் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தி சமநிலையை பராமரிக்கிறது. நெஞ்செரிச்சல், அசௌகரியம் மற்றும் வயிற்றுவலி ஆகியவற்றை குணப்படுத்தவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வாழைத்தண்டு பித்தப்பையை சுத்தமாக வைத்து சிறுநீரக கற்கள் சேராமல் தடுக்கிறது. வாழைத்தண்டு சாறுடன் ஏலக்காய் பொடி, மோர் சேர்த்து கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தப்பை சுத்தமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாப்பிட ஏற்ற பானம் இதுவாகும்.
வாழைத்தண்டில் நிறைந்துள்ள வைட்டமின் B6 மற்றும் இரும்பு சத்துக்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரிக்க உதவுகின்றன. எனவே இரும்பு சத்து குறைபாட்டால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
வாழைத்தண்டு நன்மைகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்