வாகனத்தில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு!

ஹபரணை – பொலன்னறுவை வீதியில் மின்னேரிய பகுதியில் கெப் ரக வாகனத்தில் எரிந்த நிலையில் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த கெப்ரக வாகனம் எரிந்து நாசமாக்கப்பட்டிருந்த நிலையில், அதன் இருக்கையிலிருந்து எரிகாயங்களுடன் குறித்த நபரின் சடலம் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

பொலன்னறுவையில் இருந்து ஹபரணை நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனமொன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

குறித்த வாகனத்திற்கு அருகில் உயிரிழந்த நபருடையது எனச் சந்தேகிக்கப்படும் பயணப்பை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த பயணப்பை கயிற்றினால் கட்டப்பட்டிருந்ததுடன், சடலமாக மீட்கப்பட்டவரின் சில ஆவணங்களும் குறித்த வாகனத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்