
வந்தாறுமூலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச சபைக்குரிய வந்தாறுமூலை வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் நேற்று சனிக்கிழமை தங்களது ஆரம்ப பிரச்சாரப் பணிகளில் ஈடுபடும் முகமாக வந்தாறுமூலை கிராமத்தில் உள்ள அனைத்து ஆலயங்களுக்கும் சென்று இறை ஆசியினை வேண்டி வழிபாடுகளை மேற்கொண்டிருந்ததோடு தங்களது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
முதலில் வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து கண்ணகி அம்மன், மருங்கையடி சித்தி விநாயகர் ஆலயம், வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயம், பெரியதம்பிரான் ஆலயம் மற்றும் ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயம் என கிராமத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று தங்களது வணக்கத்தினை மேற்கொண்டு இன்றைய பிரச்சாரப் பணியினை நிறைவு செய்தனர்.
குறித்த நிகழ்வானது வந்தாறுமூலை வட்டார வேட்பாளரான தர்மலிங்கம் பிரபாகரன், பட்டியல் வேட்பாளர்களான நல்லையா சிவசக்தி, கிருஷ்ணப்பிள்ளை மதுமதி ஆகியோரை ஆதரித்து இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இளையதம்பி சிறிநாத், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.